குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
முருகப்பெருமானை நோக்கி அனுஸ்டிக்கப்பட்டுகின்ற விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்த சஷ்டி திகழ்கின்றது. இந்த கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று முரசுமோட்டை கந்தக்கோட்டம் சிவ சுப்ரமணியர் ஆலயத்தில் பெருந்திராளன பக்கத்தர்கள் புடைசூழ பல வடிங்கள் எடுத்து வந்த சூரபத்மனை, அருள்மிகு சிவ சுப்ரமணியர் சங்காரம் செய்தார்.
முன்னதாக வசந்த மண்டப பூஜை இடம்பெற்ற பின்னர் முரசுமோட்டை பதியில் வீற்றிருக்கும் கந்தக்கோட்டம் அருள்மிகு சிவ சுப்ரமணியர் உள்வீதி சுற்றி வந்தார். பின்னர் வெளி வீதியில் வந்து சூரனுடன் போரில் ஈடுபட்டு இறுதியில் வெற்றி கொண்டார்.
முரசுமோட்டை சிவ சுப்ரமணியர் ஆலயத்தில் இறுதிநாளான இன்று பெருந்திராளன பக்தர்கள் திரண்டு சிவ சுப்ரமணியரின் அருள் வேண்டிப் பிராத்தித்தனர் .
அத்துடன் நாளை (06) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தமும் பாரணமும் இடம்பெற்று மாலையில் பொன்னூஞ்சலுடன் கந்தசஷ்டி நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.