பதியத்தலாவையில் கைது செய்யப்பட்ட மௌலவி ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலை செய்த நிலையில், அவரை நாளை 08-05-2019 வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பதியத்தலாவை ஜும்மா பள்ளிவாசலின் பிரதம மௌலவி மீதுர சந்தேகம் ஏற்பட்டதையடுத்து தெகியத்தக்கண்டிய காவற்துறையினர் குறிப்பிட்ட மௌலவியின் அறையை சோதனையிட்ட போது தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் மொகமத் சஹாரானின் உரையடங்கிய ஒளிப் பதிவு நாடாக்கள், இறுவெட்டுக்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. இதையடுத்து குறித்த மௌலவி கைது செய்யப்பட்டு தெகியத்தகண்டிய நீதவான் திமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட நிலையில் அவரை நாளை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.#remanded #srilanka #jummah
611
Spread the love