159
ஹாவா குழுவிற்கும் பாதுகாப்பு தரப்பிற்கும் இடையில் தொடர்பு கடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஹாவா குழுவிற்கும் அரசியல் தரப்புக்களுக்கும் பாதுகாப்பு தரப்புக்களுக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹாவா குழுவின் உறுப்பினர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நபர்கள் குறுகிய காலத்திற்குள் காவல்துறையினரால் கைது செய்;யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பியகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love