குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சர்ச்சைக்குரியவை எனவும் குறிப்பிட்டுள்ளார். சில பரிந்துரைகளை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் சிலவற்றை தாம் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சட்ட மா அதிபரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவருமான அமரர் சீ.ஆர். டி சில்வாவின் நினைவுப் பேருரையில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையை கடுமையானதாக்குமாறு தமது வகுப்புத் தோழரான சீ.ஆர்.டி சில்வாவிடம் தாம் கோரியதாகவும் அதற்கு அவ்வாறு கடுமையாக்கினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் மிகவும் குறைவாகக் காணப்படும் என அவர் கூறியதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு நீதித்துறை விமர்சனங்களைத் தாண்டியதாக இருக்க வேண்டும் என சீ.ஆர்.டி சில்வா விரும்பியதாக தெரிவித்துள்ளார்.