Home இலங்கைஆவா குழுவுக்கு எந்த ஒரு பின்னணியும் இல்லை – டக்ளஸ் தேவானந்தா

ஆவா குழுவுக்கு எந்த ஒரு பின்னணியும் இல்லை – டக்ளஸ் தேவானந்தா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

ஆவா குழுவுக்கு எந்த ஒரு பின்னணியும் இருப்பதாக தனக்கு தோன்றவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் , யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,  இந்திய சினிமாக்களை பார்த்து அதேபோன்று தமக்குள் குழு அமைத்து உள்ளனரே தவிர அவர்களுக்கு பெரியளவில் பின் புலன்கள் இருப்பதாக தெரியவில்லை. அந்த காலம் தொட்டு ஊருக்கு ஒரு சண்டியர் , சிறு குழுக்கள் என்பன இருந்து தான் வருகின்றது. அதேபோன்ற ஒரு குழுவே இதுவும்.  ஊடகங்களும் பொலிஸ் தரப்பும் சேர்ந்து தான் அதனை ஊதி பெருப்பித்து உள்ளன. முன்னர் இருந்த அரசாங்கத்தை தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்துவதற்காக அந்த குழுவின் பெயரை பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்தார்.

தற்போதைய தமிழ் இளைஞர்கள் வாள்களுடன் திரிவதற்கு காரணம் கடந்த கால நிகழ்கால தமிழ் தலைமைகளே . பிரச்சனைகளை தீர்க்க முற்படாது அவற்றை தீரா பிரச்சனையாக வைத்திருக்கவே முயல்கின்றார்கள் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More