குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஊனமுற்ற படைவீரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு மற்றும் நீர்த் தாரை பிரயோகத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவினால் இந்தக்குழு இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மூன்று பேர் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன, சிரேஸ்ட துணைச் செயலாளர் நிசாந்த வீரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்த தாக்குதல் குறித்து எதிர்வரும் 10ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.