குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லிங் அண்மையில் வெளியிட்ட கருத்து சரியானதே என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. தெளிவற்ற விடயங்கள் மற்றும் சில புரிந்துணர்வின்மை குறித்து சீனத் தூதுவர் விளக்கம் அளித்துள்ளதாகவும் சீன இலங்கை உறவுகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் தெரிவித்துள்ளார்.
நட்பு நாடான இலங்கையுடன் கூட்டுறவையும் நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு தெளிவுபடுத்தப்பட்டதாகவும் ஏதேனும் சர்ச்சைகள் குழப்பங்கள் காணப்பட்டால் அது குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதே சீனாவின் நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சீனத் தூதுவர் வெளியிட்ட கருத்து குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.