குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மக்களை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையில் வரவு செலவுத்திட்டம் அமையும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த தடவை சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத்திட்டம், மக்களின் எதிர்பார்ப்புக்களை சூன்யமாக்கும் வகையில் அமையப் பெறும் எனவும் தமக்கு தெரிந்த வகையில் இம்முறை வரவு செலவுத்திட்டம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் நன்மை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு எவ்வித நலன்களும் கிடைக்காது எனக் குறிப்பிட்டுள்ள அவர் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரப்பிரசாதங்கள் நீக்கப்பட்டு மக்கள் மீது கடுமையான வரிச் சுமை சுமத்தப்படும் வகையில் இந்த வரவு செலவுத்திட்டம் அமையும் என குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சுபமான எதனையும் எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.