குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமெரிக்காவில் பாரியளவில் பிளவு காணப்படுவதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளின்ரன் தெரிவித்துள்ளார். இந்த நாட்டை ஆட்சி செய்ய வேண்டிய பொறுப்பினை டொனால்ட் ட்ராம்ப்பிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் ட்ராம்ப் வெற்றிகரமான ஓர் ஜனாதிபதியாக திகழ்வார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமது தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்திய தரப்பினர் மிகவும் திறமையான சிறந்தவர்கள் எனவும் தற்போதைய ஜனாதிபதி பரக் ஒபாமா நாட்டுக்காக அளப்பரிய சேவையை ஆற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தோல்வி வருத்தமடையச் செய்வது என்றாலும் மக்களின் ஆணைக்கு அனைவரும் அடிபணிய வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தேர்தல் தோல்வியின் பின்னர் ஆற்றிய விசேட உரையில் ஹிலரி இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலரி வெற்றியீட்டுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.