ஜெர்மனியின் மியூனிக் நகரில் மிகப்பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மியூனிக் நகரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ளுர் அகதி முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமிலுள்ள 160 குழந்தைகள் தமது பிரதேசத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலேயே இந்த சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
அகதிமுகாம் குறித்த பகுதியில் வந்ததன் பின்னர் கூச்சல் அதிகரித்து விட்டதாகவும் இதனால் தமது வீடுகளின் பெறுமதி குறைந்து விட்டதாகவும் தெரிவித்து தமது வசதிக்காக சுவர் கட்டப் போவதாக நீதிமன்றில் மியூனிச் நகர மக்கள் முறையிட்டனர்.
நீதிமன்றமும் இதற்கு அனுமதியதனைத் தொடர்ந்து 4 மீற்றர் உயரத்தில் மிக நீளமான சுவர் ஒன்றைக் கட்டிவிட்டியுள்ளனர். பெர்லின் சுவரின் உயரமே 3.6 மீற்றராக உள்ள நிலையில் இந்தச் சுவர் 4 மீற்றராக உள்ளதற்கு ஏனைய பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது மிகவும் பயங்கரமான செயல் எனவும் முட்டாள்தனமானதெனவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் மதில் அமைக்கப்பட்ட பவேரியா பகுதியில் உள்ள மக்களில் ஐந்தில் நான்கு பேர் முஸ்லிம்கள் மற்றும் அகதிகள் குறித்து எதிர்மறையான கருத்துகளைக் கொண்டிருப்பதுடன் அதிபர் ஏஞ்சலா மெர்கலின் அகதிகள் குறித்த நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.