130
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
ஊனமுற்ற படைவீரர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அண்மையில் ஊனமுற்ற படைவீரர்கள் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு பாராளுமன்றில் உரையாற்றிய போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love