175
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
பாராளுமன்றில் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நோக்கத்திற்காக கைவிரல் அடையாளங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையை பாராளுமன்றில் அறிமுகம் செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
கைவிரல் அடையாளம் திரட்டும் பணிகளுக்கு அனைத்து உறுப்பினர்களதும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love