குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்தள விமான நிலையத்தின் சேவையை 45 சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் நிராகரித்துள்ளன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் நடைபெறும் காலத்தில் மாற்றீடாக மத்தள விமான நிலையத்தினை பயன்படுத்துமாறு 45 வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களிடம அரசாங்கம் விடுத்த கோரிக்கையை குறித்த சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.
கடந்த 20 ஆண்டுகள் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்ற கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடு பாதை 50 மில்லியன் அமெரிக் டொலர் செலவில் புனரமைக்கப்பட உள்ளது.
தற்போது நாளொன்றுக்கு 4 மணித்தியாலங்கள் மூடப்படுகின்ற விமான நிலையத்தை எதிர்வரும் நாட்களில் சுமார் 8 மணித்தியாலங்கள் மூடி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மத்தள விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனமே இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.