Home இலங்கை மக்கள் தொழில்சார் அரசியல்வாதிகளை வெறுக்கின்றனர் – கோதபாய ராஜபக்ஸ

மக்கள் தொழில்சார் அரசியல்வாதிகளை வெறுக்கின்றனர் – கோதபாய ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

மக்கள் தொழில்சார் அரசியல்வாதிகளை வெறுக்கின்றார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வர்த்தகரான டொனால்ட் ட்ராம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியமை, மக்களின் விரக்தி நிலையையே வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளின் வெறும் பேச்சு மட்டுமே தீர்வுகள் எதனையும் வழங்குவதில்லை என்பதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே ட்ராம்ப் வெற்றியீட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை இலங்கையும் பாடமாகக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More