குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்பின் ஒத்துழைப்புடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத்திட்டமொன்றை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ட்ராம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவானமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து டொனால்ட் ட்ராம்ப்பின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் ட்ராம்பை தெளிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.