நியூசிலாந்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது கிறிஸ்ட்சர்ச் பகுதியிலிருந்து இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில 7.4 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டு , சுமார் இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாடு முழுதுமே இதன் தாக்கம் உணரப்பட்டதாகவும் நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள சிறிய ஊரான செவியட்டில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளததாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
தெற்குத் தீவான வடக்கு கண்டர்பரி பகுதியில் 1 மீட்டர் உயரத்திற்கு முதல் சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாகவும் உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.