அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மக்களின் பிரார்த்தனையால் மறுவாழ்வு பெற்றுள்ளதாகவும் நலம் பெற்று திரும்புவேன் எனவும் மக்களின் பேரன்பு இருக்கும்போது எந்த குறையும் தனக்கில்லை. வெகுவிரைவில் முழுமையான நலம்பெற்று பணிக்கு திரும்பி வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன் என தெரிவிக்க்பபட்டுள்ளது.
முதலில் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லாமல் இருந்ததாகவும் பின்னர் ஜெயலலிதாவின் கையெழுத்துடன் அதே அறிக்கை மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.