Home உலகம்அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழும் 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவர் – டிரம்ப்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழும் 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவர் – டிரம்ப்

by admin

அமெரிக்காவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்களித்த நேர்காணலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருக்கும் லட்சக்கணக்கானோரை வெளியேற்றுவேன் எனவும்  ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் உடனடியாக  30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குற்றப் பின்னணி உள்ளவர்கள், ரௌடிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்டோர்  சுமார் 20 லட்சம் பேர் உள்ளதாகவும்  அவர்களை கண்டறிய வேண்டும் எனவும் இத்தொகை  30 லட்சம் பேர் வரை கூட இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களை பிடித்து வெளியேற்றுவோம்  அல்லது கைது செய்து சிறையில் அடைப்போம் என்பதுடன் அமெரிக்க மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் உள்ள தடை சுவர்கள் உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More