Home இலங்கைஅர்ஜூன் மகேந்திரனுக்கு பிரதமர் அலுவலகம் சம்பளம் செலுத்தவில்லை

அர்ஜூன் மகேந்திரனுக்கு பிரதமர் அலுவலகம் சம்பளம் செலுத்தவில்லை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு பிரதமர் அலுவலகம் சம்பளம் எதனையும் செலுத்தவில்லை என அலுவலகத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் அர்ஜூன் மகேந்திரனுக்கு எவ்வித பதவியோ அல்லது சம்பளமோ வழங்கப்படவில்லை எனவும் அர்ஜூன் மகேந்திரன் பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணியாற்றும் அனைவருக்கும் நியமனக் கடிதங்களை வழங்கும் பொறுப்பு பிரதமரின் செயலாளருக்கு உண்டு எனவும் அவ்வாறு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேறு எந்த வழிகளிலும் பதவிகளை வழங்க முடியாது எனவும், அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்ட சிலர் அரசாங்கத்தின் ஐந்தாண்டு திட்டம் தொடர்பில் சில யோசனைகளை முன்மொழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More