குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
காலநிலை பாதுகாப்பு குறித்த பாரிஸ் உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு முயற்சிக்கப்படும் என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி பரக் ஒபாமா பதவியில் இருக்கும் போதே குறித்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்காக முழு அளவில் முயற்சிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகம் வெப்பமயமாவதனை தடுக்கும் நோக்கில் உலக நாடுகள் கையொப்பமிட்டுள்ள இந்த உடன்படிக்கையை முழு அளவில் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.