ரூபாய் தாள்களின் விநியோகம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிரேஸ்ட அமைச்சர்களுடன் நேற்று நள்ளிரவு ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய அரசின் 500, மற்றும் 1000 ரூபாத் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து இந்தியா முழுவதும் மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
வங்கிகளில் பண பரிமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது, ஏன் இந்த பிரச்சினை என்பது குறித்தே பிரதமர் சிரேஸ்ட அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி வெங்கையா நாயுடு, மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஸ் கோயல் உள்ளோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் நிதி அமைச்சக துறையின் சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதன் போது நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி தாளாளர்கள் குறைந்த பட்சம் 50 ஆயிரம் ரூபாவை இருப்பு வைத்திருக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகவும் வங்கி தாளாளர்கள் ஒரே நாளில் பலமுறை பணம் எடுப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.