குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நாடு தழுவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் நடத்தவிருந்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி ரவி கருணாநாயக்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் தமது தீர்மானம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறும் போது அறவீடு செய்யப்படும் குறைந்தபட்ச அபராதத் தொகை 2500 ரூபாவாக உயர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டே நாளைய தினம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடு தழுவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில்
Nov 14, 2016 @ 16:25
நாடு தழுவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டமொன்றை மேற்கொள்ள உள்ளனர். வரவு செலவுத் திட்டத்தில் மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறும் போது அறவீடு செய்யப்படும் குறைந்தபட்ச அபராதத் தொகை 2500 ரூபாவாக உயர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளைய தினம் இந்தப் பணிப் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த குறைந்தபட்ச அபராதத் தொகை அதிகரிப்பில் திருத்தம் செய்யப்பட வாய்ப்பு இல்லை என அண்மையில் நிதி அமைச்சர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.