குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
காணாமல் போனோர் அலுவலகம் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இயங்கும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பிலான சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி மூலம் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் அரசியல் சாசனசபை, காணாமல் போன அலுவலகத்திற்காக ஏழு பேரைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.