குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நீர்க் கட்டண அதிகரிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. நீர் கட்டணங்களை 30 வீதத்தினால் அரசாங்கம் உயர்த்தியுள்ளது. நீர்க் கட்டண அதிகரிப்பிற்கும் சுதந்திரக் கட்சிக்கும் தொடர்பு கிடையாது எனவும் இந்த கட்டண உயர்வு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டதல்ல எனவும் கட்சியின் உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நீர்க்கட்டண அதிகரிப்பு குறித்து தெரியாது எனவும் இது பற்றி பேசப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ரப் ரக கணனிகளை வழங்கி மறுபுறத்தில் இணைய கட்டணங்களை உயர்த்துவது , எதிர்பார்த்த நோக்கத்தை அடைய தடையாக அமையும் என குறிப்பிட்டுள்ள அவர் வரவு செலவுத் திட்டத்தில் காத்திரமான யோசனைகளைப் போன்றே சில பயனற்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.