Home இலங்கைஹோட்டல் உணவுப் பொருட்களுக்கான விலைகள் உயர்வு?

ஹோட்டல் உணவுப் பொருட்களுக்கான விலைகள் உயர்வு?

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஹோட்டல் உணவுப் பொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட உள்ளன. எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் ஹோட்டல் உணவுப்பொருட்களின் விலைகளை உயர்த்த தீர்மானிக்கபட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பால் தேனீர் 10 ரூபாவினாலும், தேனீர் 5 ரூபாவினாலும், சோற்றுப் பொதிகள், ப்ரைட் றைஸ், கொத்து ரொட்டி போன்ற உணவு வகைகள் பத்து ரூபாவினாலும் உயர்த்தப்பட உள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நீர்க்கட்டண உயர்வினால் மாதாந்த நீர்க் கட்டணங்கள் சுமார் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிர்வரும் நாட்களில் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஹோட்டல்களையும் மூடி எதிர்ப்பு வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் சிற்றுண்டி வகைகளுக்கான விலைகள் உயர்த்தப்படாது என மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More