165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குருணாகல் காவல் நிலையத்தில் கடமையாற்றிய உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொரு காவல்துறை உத்தியோகத்தர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒரு மாதத்தில் ஒய்வு பெற்றுக்கொள்ளவிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love