பாகிஸ்தானின் பல சர்வதேச பாடசாலைகளிலும் பணி புரிந்து வரும் நூற்றுக்கும் அதிகமான துருக்கிய ஆசிரியர்களை இந்த வார இறுதியில் தமது குடும்பங்களுடன் நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
அந்த ஆசிரியர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த துருக்கிய மதகுருவான பெதுலா குலனுடன் தொடர்புடையதாக துருக்கி அரசினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 28 தனியார் பாடசாலைகளில் பணிபுரிகின்றனர்; என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டினை குறித்த ஆசிரியர் மறுத்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் துருக்கியில் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிவடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் பெதுலா குலனின் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாக துருக்கி அரசாங்கம் குற்றம் சுமத்திய நிலையில் குலன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் பாகிஸ்தானிற்கான தனது இரண்டு நாள் பயணத்தை நேற்றையதினம் ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.