173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் சட்டமா அதிபரினால் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
சட்டமா அதிபரினால் தெரிவிக்கப்பட்ட விளக்கங்களை கருத்திற்கொண்டு மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கான அனுமதி அரசியலமைப்பு விதிமுறைகளில் காணப்படுகின்றது என, சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட விளக்கத்தினையும் சுட்டிக்காட்டியுள்ளது.
Spread the love