Home இலங்கைவரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனை கடந்த 10ம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய தினம் மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றில் நடைபெற்ற  போது ஆதரவாக 162 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 107 மேலதி வாக்குகளினால் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜே.வி.பி கட்சி எதிராக வாக்களித்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து வாக்களிப்பில் பங்கேற்றிருந்தது.

ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்ஸ வாக்கெடுப்பின் போது அவையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More