Home இலங்கைமஹிந்தவை மீளவும் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்த முயற்சித்தோம் – மஹிந்த அமரவீர

மஹிந்தவை மீளவும் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்த முயற்சித்தோம் – மஹிந்த அமரவீர

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பதவியில் மீளவும் அமர்த்த முயற்சித்ததாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்காக மக்களுக்கு நிதி வழங்குதல் மற்றும் பொருட்களை வழங்குதல் என பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டதாகவும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மேற்கொள்ளப்பட்ட சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More