Home இலங்கைஇறக்காமம் பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டங்கள் 27 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பம்

இறக்காமம் பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டங்கள் 27 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பம்

by admin

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள இறக்காமம் பிரதேச பாடசாலைகளுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்  ஆரம்பக் கல்வி கற்றல் வள நிலையம் மற்றும் ஆசிரியர் விடுதிகளுக்கான   அடிக்கல் நாட்டும்  நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அழைப்பின் பேரில் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீமின்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹம்மட பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார்.

06

வரிப்பத்தான்சேனை லீடர் ஜுனியர் பாடசாலைக்கு 18 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பக் கல்வி கற்றல் வள நிலையத்திற்கான இருமாடிக் கட்டிடம்,    வாங்காமம் ஒராபிபாஷா வித்தியலயத்திற்கு  4.5 மில்லியன் ரூபாய் செலவில் ஆசிரியர் விடுதி, இலுக்குச்சேனை அரசிலன் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கு 4.5 மில்லியன் ரூபாய் செலவில் ஆசிரியர் விடுதி ஆகியவற்றுக்கான வேலைத்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

10 1112

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More