188
பிரான்ஸ் மத்திய வலது சாரி குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஆரம்பகட்ட தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலாஸ் சர்கோசி மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளதனால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இந்த தோல்வியை ஒப்புக்கொண்ட சர்கோசி, நேற்றையதினம் முதல் சுற்றில் முதலாவதாக வந்த பிரான்சுவா ஃபியோங்கிற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
மற்றுமொரு முன்னாள் பிரதமரான அலாங் யுபே இரண்டாவதாக வந்துள்ளதனை அடுத்து அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாவது சுற்று தேர்தலில பிரான்சுவா ஃபியோங் மற்றும் அலாங் யுபே ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
Spread the love