குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
படையினர் மீது ஜனாதிபதிக்கு பூரண நம்பிக்கை உண்டு என தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையில் இராணுவ சதிப்புரட்சி ஏற்படக்கூடிய சாத்தியங்கள் எதுவும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன அண்மையில் இராணுவ சதிப்புரட்சி குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
நாட்டின் படைச்சேனாதிபதி என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படையினர் மீது பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கற்பனையாக இவ்வாறு சதிப்புரட்சி பற்றி தகவல் வெளியிட்டுள்ளதாகவும், அவ்வாறான ஓர் விடயம் பற்றி தமக்கு இதுவரையில் அறியக்கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.