Home இலங்கை காவல்துறையினர் நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் – ரணில்

காவல்துறையினர் நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் – ரணில்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காவல்துறையினர் நாட்டின் கௌவரத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காவல்துறையினர் , காவல்துறை திணைக்களம் மற்றும் நாட்டின் கௌரவம் ஆகியனவற்றை உறுதி செய்யும் வகையில் கடமையாற்ற வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து காவல் நிலையங்களிலும் கடமையாற்றி வரும் அதிகாரிகள் தேசிய ஒற்றுமையை உறுதி செய்யும் வகையில் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள பிரதமர் காவல்துறை உத்தியோகத்தர்களை பயிற்றுவிக்கும் நோக்கில் பல்கலைக்கழகமொன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More