Home இலங்கைதையிட்டியில் வெடிபொருள் மீட்பு.

தையிட்டியில் வெடிபொருள் மீட்பு.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட தையிட்டி கிழக்கில் இரண்டு மிதிவெடிகளும் , வெடிக்காத நிலையில் மண்ணில் புதையுண்ட நிலையில் எறிகணை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட தையிட்டி கிழக்கில் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட காவலரண் ஒன்றில் இருந்தே மேற்படி வெடி பொருட்கள் கண்டெடுக்கப் பட்டு உள்ளது.

குறித்த பகுதியில் மக்கள் மீள் குடியேறி தமது காணிகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குறித்த பகுதிகளில் வெடி பொருட்கள் காணப்படும் அபாயம் இருப்பதனால் அவதானமாக தமது காணிகளை துப்பரவு செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுகொண்டுள்ளனர் .

15181455_1031891656921708_7495737666074923244_n

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More