குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆளும் கட்சியின் 14 அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, லக்ஸ்மன் கிரியல்ல, கபீர் ஹாசீம் உள்ளிட்ட பதினான்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் காணப்படுவதாகவும் இந்த அமைச்சர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் பற்றிய ஆதாரங்கள் மற்றும் ஏனைய விபரங்கள் அடுத்த வாரம் முதல் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹாபொல புலமைப் பரிசில் திட்டத்தில் மட்டும் சுமார் 1.5 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.