இலங்கை பிரதான செய்திகள்

போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது – கடற்படை

raveenthira-gunaratna
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார். போதைப் பொருள் குற்றச் செயல்களை தடுக்க பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போதைப் பொருள் கடத்தல் முயற்சிகள் சில ஏற்கனவே முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் கடல் வழியாக போதைப் பொருள் கடத்தல் முயற்சிகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை நிலவும் காலப்பகுதியில் சில சவால்களை எதிர்நோக்க நேரிட்டாலும் அதி நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு போதைப் பொருள் கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link