Home இந்தியாநாணயத்தாள் நடவடிக்கையின் சிரமங்களை கண்டித்து திமுக இன்று மனித சங்கிலி போராட்டம்

நாணயத்தாள் நடவடிக்கையின் சிரமங்களை கண்டித்து திமுக இன்று மனித சங்கிலி போராட்டம்

by admin

நாணயத்தாள் ஒழிப்பால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

இந்திய மத்திய அரசின் நாணயத்தாள் செயலிழத்தல் அறிவிப்பால் மக்கள் கடும்  சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாகவும்  அவர்களின் சிரமங்களைப் போக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இன்று 4 முதல் 5 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் எனவும் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

அதன்படி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னை கொளத்தூரில் நடைபெறும் போராட்டத்தில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கட்சி ரீதியான சென்னை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய 4 மாவட்டங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின்  மாவட்டச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More