164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுற்றுலா விசாவில் இலங்கை வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்தியப் பிரஜை ஒருவர் யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து ஒரு தொகை துணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவரை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Spread the love