குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய விவகாரம் தொடர்பில் உலகம் பாராமுகமாய் இருக்கக் கூடாது என பிரான்ஸ் கோரியுள்ளது. சிரிய படையினரும் நட்பு நாடுகளும் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து பிரான்ஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலையை பயன்படுத்திக் கொண்டு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி பசல அல் அசாட்டின் அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாகவும் புதிய தடைகள் விதிக்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளது.
ஜனவரி மாதம் 20ம் திகதியே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் பதவி ஏற்றுக்கொள்வார் எனவும், அது வரையில் தற்போதைய ஜனாதிபதி பரக் ஒபாமா வலுவான தீர்மானங்கள் எதனையும் எடுக்கக்கூடிய சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.