196
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் மாவீரர் நாளை நினைவு கூர்ந்தும் துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவே குறித்த துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் 26ம் திகதி என்பதுடன் மாவீரர் நாள் 27ம் திகதி அனுஸ்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love