குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கும் இடையில் இரகசிய இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை இலக்கு வைத்து இந்த இரகசிய இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ஸ தரப்பும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்களும் இரகசிய சந்திப்புக்களை நடத்தி இது பற்றி பேசியுள்ளதாகவும் எங்கு சந்தித்தார்கள் என்ன பேசினார்கள் என்பது பற்றிய விபரங்கள் தம்மிடம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது சுதந்திரக் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்தும் நோக்கில் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இந்த ரகசிய சந்திப்பு பற்றிய சகல விபரங்களும் ஒரு மாத கால இடைவெளியில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.