மறைந்த கியூபப் புரட்சியின் தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ குடல் உபாதை காரணமாக 2006ல் தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிற்கு தற்காலிகமாக தனது அதிகாரங்களை வழங்கினார். பின்னர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ரவுல் காஸ்ட்ரோ முழுமையாகப் பதவிப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
![ஃபிடல் காஸ்ட்ரோ](http://ichef-1.bbci.co.uk/news/624/cpsprodpb/A8C7/production/_92670234_fidel1.jpg)
உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் இருந்து சில முக்கிய துளிகள்
1926 : கியுபாவின் தென் கிழக்கு மாநிலமான ஓரியண்ட் மாகாணத்தில் பிறப்பு.
1953: பட்டிஸ்டா அரசுக்கு எதிராக நடத்தி தோல்வியில் முடிந்த கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிறகு சிறை வைப்பு
1955: பொது மன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து வி்டுதலை
1956: செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கெரில்லாப் போர் தொடக்கம்
1959: பட்டிஸ்டா அரசை தோற்கடித்து, கியுபாவின் பிரதமராகப் பதவியேற்பு
1961: கியுபாவிலிருந்து வெளியேறி நாடுகடந்த நிலையில் இருந்தவர்களால், அமெரிக்க உளவு நிறுவனமான, சி.ஐ.ஏவின் உதவியுடன் நடந்த ‘ பன்றிகள் குடா’ ( Bay of Pigs) ஆக்ரமிப்பு தோற்கடிப்பு.
1962: சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகளை கியுபாவில் நிலைநிறுத்துவதற்கு உடன்பட்டதன் மூலம், அமெரிக்காவுடன் போர் மூள வைத்திருக்கக்கூடிய `கியூபா ஏவுகணை நெருக்கடி`தூண்டப்பட்டது.
1976: கியுபாவின் தேசிய நாடாளுமன்றத்துக்குத் தேர்வு
1992: அமெரிக்காவுடன் கியூபா அகதிகள் தொடர்பில் ஒப்பந்தம் எட்டப்படுகிறது.
2008: கியூப அதிபர் பதவியிலி்ருந்து உடல் நலக் குறைவு காரணமாக காஸ்ட்ரோ பதவி விலகல்.
BBC