குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளைத்தளபதியாக கடமையாற்றிய முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் கே.எல்.எம். சரத்சந்திரவிற்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் அழுத்தங்களின் காரணமாக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினர் குறித்த முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபரை கைது செய்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் ஜீப் வண்டி ஒன்றை பயன்படுத்தியமைக்காக இவ்வாறு கைது செய்துள்ளதாகவும் விசேட அதிரடிப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டியே இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வாகனத்தைப் பயன்படுத்திய காலப் பகுதியில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான எரிபொருளை அவர் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.