சகஜ நிலைமை கொஞ்சம், கொஞ்சமாக திரும்பி வருவதாக வங்கிகள் தம்மிடம் சொல்வதாகவும் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் இருந்து வந்த நீண்ட வரிசைகள் குறைந்திருக்கின்றன எனவும் இந்திய ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் தமக்கு கிடைக்கவில்லை எனவும் ஏ.டி.எம். இயந்திரங்களை மறு சீரமைக்கும் பணியில் சுமார் 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இப்போது வருகிற புதிய ரூபாய் தாள்கள் பழைய தாளின் தடிமனுடன் ஒப்பிடுகையில் மாறுபட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக கள்ள ரூபாய்த்தாள்களை அச்சிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.