குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் பிணையில் விடுதலை செய்பய்பட்டுள்ளார். அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பு பிரதம நீதவான் கருணாவை விடுதலை செய்துள்ளார். கடந்த திங்கட்கிழமை கருணாவிற்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் மறுப்ப வெளியிட்டிருந்தது.
எவ்வாறெனினும் இன்றைய தினம் கருணாவிற்கு கொழும்பு பிரதம நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
கருணாவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது
Dec 5, 2016 @ 11:02
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த மனு இன்றைய தினம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான குண்டுதுளைக்காத வாகனமொன்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார் என்ற குற்றச்சாட்டில், கருணா கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு டிசம்பர் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இணைப்பு 3 – கருணாவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
Nov 29, 2016 @ 12:02
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகிய போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் போதே நீதிமன்றம் மேற்படி உத்தரவிட்டுள்ளது.
அரசாங்க வாகனங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்ட கருணா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இணைப்பு 2 கருணா கைது
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையில் ஆஜராகிய போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்க வாகனங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து கருணா அம்மானிடம் விசாரணை நடத்த அழைக்கப்பட்டிருந்தார்.
கருணா அம்மான் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கருணா நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜர்
Nov 29, 2016 @ 09:42
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜாகியுள்ளார். வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக கருணா அம்மான் இவ்வாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் கருணா பிரதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.