குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படக் கூடாது என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 100,000 ரூபாவாக உயர்த்தப்படுவதனை எதிர்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கையானது நல்லாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொகுதிகளில் பணியாற்றுவதற்கு, நன்கொடை வழங்க, திருமண மரண வீடுகளுக்கு செல்ல இவ்வாறு கொடுப்பனவு உயர்த்தப்படுவதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாரியளவு அமைச்சரவை காணப்பட்டதாகவும், அதிகளவு செலவிட்டதாகவும் பிரச்சாரம் செய்த இந்த அரசாங்கமும் அதிகளவு செலவிடுவதாக குற்றம் சுமத்தியுள்ள பந்துல குணவர்தன அரசாங்கம் தேர்தல் காலத்தில் அளித்த உறுதிமொழிகளை மீறி தற்போது செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.