170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகள் வெட்கப்படும் வகையிலானது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். கியூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் கஸ்ட்ரோவின் மறைவிற்கு இதுவரையில் வெளிவிவகார அமைச்சு ஒரு இரங்கல் செய்தியை வெளியிடவில்லை என கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை விவகாரங்களில் நீண்ட காலமாக கியூபா இலங்கைக்கு ஆதவரளித்து வந்தது என சுட்டிக்காட்டியுள்ள அவர் பிடெல் கஸ்ட்ரோவின் மறைவிற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு இரங்கல் வெளியிட்டிருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Spread the love