குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாராட்சி கடற்பகுதியில் புதன் கிழமை இரவு ஐந்து படகுகளில் மீன்பிடிக்க சென்ற10 மீனவர்களும் இன்று வியாழக்கிழமை மதியம் கரை திரும்பி உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று வியாழக்கிழமை அதிகாலை வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் மாலை வரை கரை திரும்பவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமராட்சி கடலில் ஐந்து படகில் சென்ற பத்து மீனவர்களை காணவில்லை
Dec 1, 2016 @ 13:26
யாழ்.வடமராட்சி கடல் பகுதியில் மீன்பிடிக்க ஐந்து படகுகளில் சென்ற பத்து மீனவர்களை காணவில்லை என கடற்தொழில் நீரியல் வளத்துறை உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
யாழில் புதன்கிழமை இரவு முதல் கடும் காற்றுடன் கூடிய மழை 2ம் திகதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினர் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் புதன் கிழமை இரவு அல்வாய் பகுதியில் இருந்து மூன்று படகுகளில் ஆறு மீனவர்களும் , வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து ஒரு படகில் சென்ற இரு மீனவர்களும் , இன்பர்சிட்டி பகுதியில் ஒரு படகில் சென்ற இரு மீனவர்களும் கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர்.
மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதனால் காணாமல் போன மீனவர்களை தேடுவதில் சிரமமான நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.