Home உலகம்பெரு நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் – ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்:-

பெரு நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் – ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்:-

by admin

பெரு நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  பெருவின் வடமேற்கில் உள்ள அன்டெஸ் மாகாணத்தின் ஜுலியாக்கா நகரில் இருந்து சுமார் 77 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 3.5 கிலோமீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு  ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக   அச்சமடைந்த  ஜுலியாக்கா நகர மக்கள் தமது  வீடுகளை விட்டு வெளியேறி   வீதிகளில்  தஞ்சம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக  குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்து காணப்படுவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More